கிறிஸ்தவ மக்களின் சாம்பல் புதன் கடந்த மார்ச் மாதம் 6ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலம் அனுசரிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக இந்த ஒரு வாரம் முழுவதும் புனித வாரமாக கடைபிடிக்கப்பட்டு ஏசுவின் பாடல்களை நினைவு கூறும் வகையில் சிறப்பு வழிபாடுகள் நடத்தி வருகின்றனர்.
புனித வெள்ளியை முன்னிட்டு பொதுமக்களுக்கு கஞ்சி வழங்கிய கிறிஸ்தவர்கள்...! - புனித வெள்ளி
கன்னியாகுமரி: புனித வெள்ளியை முன்னிட்டு சாலையோரம் சென்ற அனைத்து பொதுமக்களுக்கும் கிறிஸ்தவர்கள் கஞ்சி வழங்கினர்.
கஞ்சி வழங்கிய கிறிஸ்தவர்கள்
புனித வெள்ளியான இன்று பல்வேறு தேவாலயங்களிலும் சிலுவைப்பாதைகளும், சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கிறிஸ்தவர்கள் புனித வெள்ளியை முன்னிட்டு பல்வேறு பொது இடங்களில் பொதுமக்களுக்கு கஞ்சியை உணவாக வழங்கினர். இதனை ஆட்டோ டிரைவர்கள், பொதுமக்கள் வாங்கிப் பருகினர்.