தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்வு! - Dindigul District News

கன்னியாகுமரி: தோவாளை மலர் சந்தையில் பூக்களின் வரத்து குறைவால் அனைத்து பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது.

அறுபது நாட்களுக்கு பின் செயல்பட ஆரம்பித்த தோவாளை மலர் சந்தை
அறுபது நாட்களுக்கு பின் செயல்பட ஆரம்பித்த தோவாளை மலர் சந்தை

By

Published : May 24, 2020, 12:33 PM IST

தமிழ்நாட்டில் உள்ள மலர் சந்தைகளில் மிகவும் புகழ் பெற்றது குமரி மாவட்டம் தோவாளையில் அமைந்துள்ள மலர் சந்தையாகும். இங்கு ஓசூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் குமாரபுரம், செண்பகராமன்புதூர், ஆரல்வாய்மொழி போன்ற உள்ளூர் பகுதிகளில் இருந்து தினம்தோறும் பல டன் பூக்கள் வரத்து இருக்கும். அதேபோல் கேரளா மற்றும் மலேசியா சிங்கபூர் என வெளி நாடுகளுக்கும் பூக்கள் ஏற்றுமதி நடைபெற்று வருகிறது.

இதனிடையே கரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் மே 23ஆம் (நேற்று) வரை அறுபது நாட்கள் தோவாளை மலர் சந்தை செயல்படாமல் இருந்தது. இதனால் தோவாளை மலர் சந்தையைச் சேர்ந்த பூ வியாபாரிகள், பூ கட்டும் தொழிலாளர்கள், பூ விவசாயிகள் வருவாய் இல்லாமல் சிரமப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், பூ விற்பனை செய்பவருக்கும் மற்றொறு வியாபாரிக்கும் இடையே ஆறு அடி தகுந்த இடைவெளி விட்டு அமருவது, முகக் கவசம் அணிவது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளுடன் இன்று முதல் தோவாளை மலர் சந்தை மீண்டும் செயல்பட மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்தது. அதன்படி இன்று அதிகாலை முதல் குறைந்த பூ வியாபாரிகளுடன் தோவாளை மலர் சந்தை மீண்டும் செயல்பட ஆரம்பித்தது.

முதல் நாள் என்பதால் மலர் சந்தைக்கு பூக்கள் வரத்து மிகவும் குறைவாக இருந்ததால், அனைத்து பூக்களின் விலையும் உயர்ந்தே காணப்பட்டது. ஒரு கிலோ பிச்சி, மல்லி பூக்கள் ரூ. 300லிருந்து ரூ. 750ஆகவும், கேந்தி 30 ரூபாயில் இருந்து 60 ரூபாயாகவும், ரோஜா 70லிருந்து 110ஆகவும், செவ்வந்தி 40 ரூபாயில் இருந்து 120 ரூபாய் என விலை உயர்ந்துள்ளது. பூக்களின் விலை அதிகரித்து இருந்தாலும் பொது மக்கள் ஆர்வமுடன் பூக்களை வாங்கிச் செல்கின்றனர்.

திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் நடைபெறும் பூ வியாபாரம்

அதுபோல திண்டுக்கல் மாவட்டம் காமராஜர் பேருந்து நிலையத்தில் தகுந்த இடைவெளியுடன் இன்று காலை 6 மணி முதல் 9 மணி வரை பூ வியாபாரம் நடைபெற்றது. வழக்கமாக திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் தினம்தோறும் 10 டன் முதல் 15 டன் வரை பூக்கள் கொள்முதல் செய்யப்படும். ஆனால் இன்று ஒரு டன் பூக்கள் மட்டுமே விற்கப்பட்டுள்ளது. இந்த 60 நாட்களில் பூ விவசாயிகள் விற்பனை இல்லாததால் தங்கள் நிலங்களில் விளைந்த பூக்களை அழித்து விட்டனர். அதனால் பூ வரத்து குறைந்து காணப்பட்டது. இருப்பினும் பூக்கள் வியாபாரத்தால் விவசாயிகளும் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:’கோழி பண்ணையில் 100 நாள் பணியாளர்களை பயன்படுத்த அனுமதி வேண்டும்’

ABOUT THE AUTHOR

...view details