கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் மலர் சந்தை செயல்பட்டுவருகிறது. இங்கு இருந்துதான் குமரி மாவட்டம் முழுவதும் மலர்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இதேபோல் கேரள வியாபாரிகளும் இங்கிருந்துதான் மலர்களை வாங்கிச் செல்கின்றனர்.
ஆயுத பூஜையை முன்னிட்டு 10 மடங்கு உயர்ந்த பூக்களின் விலை - Ayudha Pooja
கன்னியாகுமரி: குமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்களின் விலை கடும் உயர்வைச் சந்தித்துள்ளது.
நாளை (அக். 25) ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ளதால் பூக்களின் தேவை அதிகம் உள்ளது. ஆனால் குமரி மாவட்டம் உள்பட ஒரு சில வெளி மாவட்டங்களில் மழை பெய்துவருவதால் பூக்களின் உற்பத்தி குறைந்துள்ளது.
இதனால் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதன் காரணமாக பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
அதன்படி, கடந்த சில நாள்களுக்கு முன்பு ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கேந்தி தற்போது ரூ.450-க்கும், ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்ட அரளி தற்போது ரூ.600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் மல்லிகை, பிச்சி உள்ளிட்ட பூக்களின் விலையும் 10 மடங்கு வரை உயர்ந்துள்ளது. இதனால் ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்கள் வாங்குவதற்காக தோவாளை சந்தைக்கு வந்த பொதுமக்கள், வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.