தமிழ்நாடு

tamil nadu

தீபாவளி பண்டிகை: தோவாளை மலர் சந்தையில் பூ விலை உயர்வு!

கன்னியாகுமரி: தீபாவளி பண்டிகையையொட்டி தோவாளை மலர் சந்தையில் அனைத்து வகை பூவின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

By

Published : Nov 13, 2020, 11:43 AM IST

Published : Nov 13, 2020, 11:43 AM IST

பூ விலை உயர்வு
பூ விலை உயர்வு

குமரி மாவட்டம் தோவாளையில் அமைந்துள்ள மலர் சந்தை பூ விற்பனைக்குப் புகழ்பெற்றது. இங்கு பெங்களூரு, ஓசூரு, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட இடங்களிலிருந்தும் ஆரல்வாய்மொழி, குமாரபுரம், தோவாளை, செண்பகராமன்புதூர் உள்ளிட்ட உள்ளூர் பகுதிகளிலிருந்தும் நாள்தோறும் பூக்கள் வரத்து இருக்கும்.

அதேபோல் இங்கிருந்து கேரளா, தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மொத்த பூ வியாபாரிகள் பூவை வாங்கிச் செல்வார்கள். இந்நிலையில் நாளை தீபாவளி பண்டிகையையொட்டி தோவாளை மலர் சந்தைக்கு சுமார் 25 டன் பூ விற்பனைக்கு வந்துள்ளது.

மேலும் பொதுமக்களுக்குப் பூ தேவை அதிகரித்துள்ளதால் பூ விலையும் உயர்ந்துள்ளது. கடந்த வாரம் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை 1,200 ரூபாய்க்கும், பிச்சி 200 ரூபாயிலிருந்து 1000 ரூபாய்க்கும், ரோஜா 100 ரூபாயிலிருந்த 280 ரூபாய்க்கும், செவ்வந்தி பூ 100 ரூபாயிலிருந்து 300 ரூபாய்க்கும் அதேபோல் அரளி 200 ரூபாய்க்கும் தாமரை ஒன்று 10 ரூபாய் முதல் 13 ரூபாய்வரை என அனைத்துப் பூவின் விலையும் உயர்ந்துள்ளது.

தோவாளை சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதலே மழை பெய்துவருவதால் தோவாளை மலர் சந்தையில் பூ விற்பனை மந்தமாகவே இருந்துவருகிறது.

ABOUT THE AUTHOR

...view details