கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பகுதியில் அமைந்துள்ள மலர்ச்சந்தை தமிழ்நாடு அளவில் புகழ் வாய்ந்தது. இங்கு மதுரை, திண்டுக்கல், ராயக்கோட்டை, ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் உள்ளூர் பகுதிகளான குமாரபுரம், ஆரல்வாய்மொழி, செண்பகராமன் புதூர் உள்ளிட்ட இடங்களிலிருந்தும் தினந்தோறும் பல டன் பூக்கள் வரும்.
அதேபோல், கேரளா மாநிலம் உள்பட பல பகுதிகளுக்குத் தோவாளை மலர்ச்சந்தையிலிருந்து பூ ஏற்றுமதியும் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், இன்று தமிழ்ப் புத்தாண்டும் குமரி மாவட்டதில் கோயில்கள், வீடுகளில் கனி காணும் நிகழ்ச்சி நடைபெறுவதாலும் தோவாளை மலர்ச் சந்தையில் பூ விலை கடுமையாக உயர்ந்துள்ளது.