கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் மிகவும் பிரபலமானது மலர் சந்தை. தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா ஆகிய வெளி மாநிலங்களுக்கும் அதிகமான மலர்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், இந்த மலர் சந்தையில் கடந்த சில நாட்களாக பூக்களின் விலை குறைந்திருந்ததால் வியாபாரிகள் போட்டிபோட்டு பூக்களை வாங்கி சென்றனர்.
ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.600 - அதிர்ச்சியில் மக்கள்!
கன்னியாகுமரி: பூக்களின் தேவை அதிகம் இருந்தும், பூக்களின் வரத்து குறைந்துள்ளதால் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
மல்லிகைப் பூ
ஆனால் தற்போது, கன்னியாகுமரியில் பூக்களின் தேவை அதிகம் இருந்தும் பூக்களின் வரத்து குறைந்துள்ளதால் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக மல்லிகை பூ கிலோ ரூ.600க்கும், பிச்சிப்பூ கிலோ ரூ.500க்கும், கனகாம்பரம் கிலோ ரூ.400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பூக்கள் விலை திடீரென உயர்ந்துள்ளதால் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.