தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டிஜிபி அலுவலகத்தில் பணிபுரிந்து குமரி திரும்பிய கண்காணிப்பாளருக்கு கரோனா - குமரி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

கன்னியாகுமரி : சென்னை டிஜிபி அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து ஊர் திரும்பியவருக்கும், மேலும் நான்கு பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா
கரோனா

By

Published : May 29, 2020, 9:36 PM IST

குமரி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 36ஆக உயர்ந்தது

சென்னை, மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சொந்த ஊரான குமரி மாவட்டத்திற்கு வருபவர்களை ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடி மையத்தில் வைத்து தற்போது கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களின் முடிவுகள் வரும் வரை சுகாதாரத் துறையினர், அவர்களை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகள், தனியார் விடுதிகளில் தனிமைப்படுத்தி பாதுகாத்து பின்னர் வீடுகளுக்கு அனுப்பி வருகின்றனர்.

அந்த வகையில் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதுவரை 31 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை டிஜிபி அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணி புரிந்துவரும் குமரி மாவட்டம் ராமனாதிச்சன் புதூரைச் சேர்ந்த நபர் திரும்பிய நிலையில், அவருக்கு ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். இதேபோன்று, சென்னையில் இருந்து காரில் வந்த இரு தம்பதியினருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், இன்று ஒரே நாளில் 5 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க :ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு மீனவர்களை மீட்க மனு

ABOUT THE AUTHOR

...view details