தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீன்பிடி தடைக்காலம் நிறைவு - மானிய டீசல் வழங்க மீனவர்கள் கோரிக்கை! - colachel kanniyakumari

அரபிக் கடலில் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்த நிலையில், குளச்சல் பகுதி மீனவர்கள் விசைப்படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். மானிய விலையில் டீசல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீன்பிடி தடைக்காலம் நிறைவு - மானிய டீசல் வழங்க மீனவர்கள் கோரிக்கை!
மீன்பிடி தடைக்காலம் நிறைவு - மானிய டீசல் வழங்க மீனவர்கள் கோரிக்கை!

By

Published : Aug 1, 2022, 11:11 AM IST

கன்னியாகுமரி:அரபிக் கடலில் மீன்களின் இனப்பெருக்க காலம் என 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நேற்று (ஜூலை 31) மாலையுடன் நிறைவு பெற்றது. இதனால் கன்னியாகுமரி மாவட்டம் முதல் கேரளா உட்பட குஜராத் வரை உள்ள அரபிக் கடலில், விசைப்படகு மீனவர்கள் நேற்றிரவே மீன்பிடிக்க கடலுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள 250 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில், மீனவர்கள் மீன் பிடிக்க மகிழ்ச்சியுடன் புறப்பட்டனர். இதனிடையே குளச்சல் தேவாலய அருட்பணியாளர்கள், விசைப்படகுகளுக்கு புனித நீர் தெளித்து பிரார்த்தனை செய்து வழியனுப்பி வைத்தனர்.

விசைப்படகுகளுக்கு புனித நீர் தெளித்து பிரார்த்தனைகள் செய்து வழியனுப்பி வைத்த தேவாலய அருட்பணியாளர்கள்

மீன்பிடி தடை காலம் முடிந்து கனவாய், ரால், கல் ரால் உள்ளிட்ட ஏற்றுமதி தரம் வாய்ந்த மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இந்நிலையில் மீனவர் செல்வன் கூறுகையில், “ஒரு வார காலம் ஆழ்கடலில் தங்கியிருந்து மீன் பிடி தொழில் செய்ய இருப்பதால், ஒரு முறை ஒரு விசைப்படகிற்கு 5,000 லிட்டர் டீசல் தேவைப்படுகிறது.

மீனவர் செல்வன் பேட்டி

அதேபோல், ஒரு விசைப்படகில் 20 மீனவர்கள் வீதம் அவர்களுக்கான ஊதியம், டீசல் செலவு என ஒரு முறை சென்று வர ஒரு விசைப்படகுக்கு அதிகபட்சம் ஏழு லட்சம் ரூபாய் வரை செலவாகும். டீசல் விலை உயர்வால் கட்டுப்படுத்த முடியாத நிலைமையில் இருக்கிறோம். அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்தும், எங்களுக்கு மானிய டீசல் வழங்கவில்லை. அதை வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்” என மீனவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க:’மீன்பிடி தடைகால நிவாரண நிதியை ரூ.15000 ஆக உயர்த்த வேண்டும்’ - குமரி மீனவர்கள்

ABOUT THE AUTHOR

...view details