மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் பருவ காலங்களில் விசைப்படகுகளில் மீன் பிடிப்பதற்கு ஆண்டுதோறும் 60 நாட்கள் தடை விதிக்கப்படுகிறது. இந்தத் தடைக்காலம் குமரியில் இரண்டு பருவங்களாக கடைப்பிடிக்கப்படுகிறது.
கன்னியாகுமரி சின்னமுட்டம் கிழக்கு கடலோரப் பகுதியில் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் மீன்பிடித் தடைக்காலம் அமலில் இருக்கிறது. மேற்கு கடற்கரைப் பகுதியான ராஜாக்கமங்கலம், முட்டம், குளச்சல், இணையம் உள்ளிட்ட பகுதிகளில் மே 31ஆம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்த இருமாத கால இடைவெளியில் விசைப்படகுகளை நங்கூரமிட்ட பழுதுபார்த்தல், வர்ணம் பூசுதல், மீன்வலை பின்னுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டனர். சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தைத் தளமாகக் கொண்டு தற்போது 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்துவருகின்றனர்.
இந்நிலையில், முதல் பருவக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவு அடைவதால், நாளை முதல் வழக்கம்போல் காலை ஐந்து மணிக்கு மீனவர்கள் விசைப்படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல உள்ளனர். இங்கு கிடைக்கும் மீன்களை கேரள மாநிலம், நெல்லை, குமரி மாவட்ட மீனவர்கள் வாங்க குவிவார்கள். வானிலை ஆய்வு மையம் சுமார் 4.4 மீட்டர் உயரம் வரை கடல் அலைகள் எழும் என்பதால் ஜுன் 14ஆம் தேதி வரை மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மீன்பிடித் தடைக்காலம் இன்றுடன் நிறைவு