கன்னியாகுமாரி: தூத்தூரை சேர்ந்த ஜெயசீலன் மகன் பென்சிகர் என்பவருக்கு சொந்தமாக விசைப்படகு ஒன்று உள்ளது. இதில் தூத்தூரை சார்ந்த சுர்லிங், சஜின், சுஜின்குமார், கெஜின் மற்றும் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த 5 பேர் என மொத்தம் 9 மீனவர்கள் கொச்சி துறைமுகத்திலிருந்து கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இந்நிலையில் மார்ச் மாதம் 10 ஆம் தேதி விசைப்படகிலுள்ள முக்கியமான பகுதியான எஞ்சின் ப்ளாக் சேதமடைந்துள்ளதால், விசைப்படகு நகர முடியாமல் 11.33 N, 71.47 E என்ற நிலையில் தத்தளித்தது. இத் தகவலை விசைப்படகிலிருந்த மீனவர்கள் சேட்டிலைட் போன் மூலம் விசைப்படகின் உரிமையாளர் பென்சிகர் வழியாக சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆன்டணிக்கு தெரிவித்துள்ளனர்.