இது தொடர்பாக இந்திய கடல் தகவல் சேவை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் குளைச்சல் முதல் தனுஷ்கோடி வரையிலான கடல் பகுதியில் வரும் 28ஆம் தேதி வரை 2.7 மீட்டர் முதல் 3.7 மீட்டர் உயரத்திற்கு ராட்சத அலைகளுக்கு வாய்ப்பு உள்ளது.

மன்னார் வளைகுடா, கன்னியாகுமரி, வங்காள விரிகுடா உள்ளிட்ட கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும்.
எனவே மீனவர்கள் இந்தப் பகுதிகளில் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். இதனைப் போன்று 28ஆம் தேதி தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகள், 29ஆம் தேதி தென்கிழக்கு வங்க கடல் அதனை ஒட்டிய அந்தமான் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவே மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.