குமரி மாவட்டம் தூத்தூர் மீனவ கிராமத்தை சேர்ந்த ஜோசப் என்பவருக்கு சொந்தமான விசைபடகில் மார்த்தாண்டன்துறை பகுதியை சேர்ந்த ரெபின் (35), ததையூஸ் (29), பிரின்ஸ் (29), கேரள மாநிலம் புல்லுவிளை பகுதியை சேர்ந்த தோமஸ் உள்பட 9 பேர் தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர்.
படகு துறைமுக முகத்துவாரத்தில் இருந்து கிளம்பிய 1 மணி நேரம் கழித்து சுமார் 3 நாட்டிக்கல் தொலைவில் படகு சென்று கொண்டிருந்தது. அப்போது, படகில் இருந்த கேரள மாநிலம் புல்லுவிளை பகுதியை சேர்ந்த அபிலாஷ் என்ற மீனவர் படகில் இல்லை என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சக மீனவர்கள் அவரை அந்த பகுதி முழுவதும் தேடினர். ஆனால் அவரை அங்கு காணக்கிடைக்காததால் மீனவர்கள் படகை கரைக்கு திருப்பி துறைமுக பகுதிக்கு வந்தனர்.