தேசிய கடல் மீன் வள மசோதா குறித்து, மீனவர்களிடையே கருத்துக் கேட்கும் கூட்டம் நாகர்கோவிலில் இன்று நடைபெற்றது. குமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், மீன்வளத்துறை அலுவலர்கள் மற்றும் மாவட்டம் முழுவதிலும் இருந்து 500க்கும் மேற்பட்ட மீனவ சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
அப்போது, 12 நாட்டிக்கல் மைல் தொலைவுக்கு அப்பால் மீனவர்கள் மீன்பிடிக்கக் கூடாது, கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் குறிப்பிட்ட தொகைக்கு மேல் மீன் பிடித்தால் அபராதம் விதிக்கப்படும் என்பது போன்ற பல்வேறு சரத்துகள் மீனவர்களைப் பாதிக்கும் வகையில் இந்த மசோதாவில்உள்ளதாக மீனவர்கள்கருத்து தெரிவித்தனர்.