தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேசிய மீன்வள கொள்கையை கைவிட வேண்டும் -மீன் தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் - கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரி:நாகர்கோவிலில் மீன் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தேசிய மீன்வள கொள்கையை கைவிட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Fisherman protest in Kanniyakumari
Fisherman protest in Kanniyakumari

By

Published : Aug 19, 2020, 10:56 PM IST

குமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்கம் சார்பில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தேசிய மீன்வள கொள்கையை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மீன்பிடி தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர்,இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், கார்ப்பரேட் நிறுவனங்களின் லாப நோக்கை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டு உள்ள தேசிய மீன்வள கொள்கையை கைவிட வேண்டும்.

விவசாயத்தையும், சுற்றுச்சூழலையும் கெடுக்கும் வகையில் பெரு முதலாளிகளுக்கு உள்நாட்டு நீர் ஆதாரங்களை தாரை வார்க்கும் மீனவர் விரோத செயலை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றனர்.

ABOUT THE AUTHOR

...view details