தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

துறைமுகத்தை சீரமைக்க கோரி மீனவர்கள் சத்தியாகிரக போராட்டம்! - துறைமுகம் சீரமைக்க கோரிக்கை

கன்னியாகுமரி: துறைமுகத்தை சீரமைக்க கோரி கால வரையற்ற தொடர் சத்தியாகிரக போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Fisher Man
Fisher Man

By

Published : Nov 3, 2020, 5:21 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் மீன் பிடி துறைமுக கட்டுமானப் பணிகள் நடந்து துறைமுகத்தை திறக்க அரசு தரப்பில் ஏற்பாடு செய்ய பட்டது. அப்போது துறைமுகத்தின் முகதுவாரத்தை அகலப்படுத்தியும், அளப்படுத்தியும் திறக்க வேண்டும்.

அதுவரை துறைமுகத்தை திறக்க வேண்டாம் என்று மீனவர்கள் துறைமுகம் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அரசு தரப்பில், துறைமுகம் திறந்த உடன் உடனடியாக சீரமைக்க படும் என்ற உத்தரவாதம் அளிக்கப்பட்டு துறைமுகம் திறக்க பட்டது.

ஆனால் பல ஆண்டுகள் கடந்தும் துறைமுகம் சீரமைக்க படாததால் துறைமுக முகத்துவாரத்தில் படகுகள் கவிழ்ந்து விபத்துகள் ஏற்பட்டு பல மீனவர்கள் உயிரிழந்தனர்.

கடந்த ஐந்து மாதங்களில் நான்கு மீனவர்கள் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மீன்பிடி துறைமுகத்தை சீரமைக்க கேட்டு தொடர் சத்தியாகிரக போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டனர்.

மீனவர்கள் போராட்டம்

அப்போது தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் உடனடியாக துறைமுகம் சீரமைக்கபடும் என உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

இதன் எதிரொலியாக துறைமுகத்தின் மணல் அள்ளும் இயந்திரம் கொண்டு வரப்பட்டு இரண்டு நாள்கள் மட்டும் மணல் அள்ளப்பட்டது. அதன் பிறகு எந்த பணியும் நடைபெறவில்லை.

இந்த நிலையில் மூன்று தினங்களுக்கு முன்பு படகு கவிழ்ந்து மீனவர் ஒருவர் உயிரிழந்தார். ஏற்கனவே அரசு தரப்பில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததால் தூத்தூர் மண்டல எட்டு மீனவ கிராம மக்கள் சின்னத்துரையில் இன்று (நவ.3) தொடர் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இந்தப் போராட்டத்தை முன்னிட்டு தூத்தூர் மண்டல எட்டு மீனவ கிராமங்களை சேர்ந்த 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 3000க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

ABOUT THE AUTHOR

...view details