ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பாலத்தில் அமர்ந்தும், அருகே பாறைகள் மீது நின்றும் மீனவர்கள் மீன்பிடிப்பது வழக்கம்.
பாம்பன் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றவர் உயிரிழப்பு! - பாம்பன் பகுதியில் கடலில் மீன்பிடிக்கச் சென்றவர் பலி
ராமநாதபுரம்: பாம்பன் பகுதியில் கடலில் தூண்டில் போட்டு மீன்பிடிக்கச் சென்றவர் உயிரிழந்தார்.

Death
இன்று அப்படியாக பாம்பன் தெற்குவாடியில் மாலைப்பொழுதில் தூண்டில்போட்டு மீன் பிடிக்க கடலுக்குள் சென்ற மீனவர் சிரஞ்சீவி கடல் நீரோட்டத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது உடலைக் கைப்பற்றிய கடற்படை காவல் துறையினர், ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை செய்துவருகின்றனர்.