கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஈரான் நாட்டில் மீன்பிடி தொழில் செய்துவருகின்றனர். தற்போது அந்த நாட்டில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் அங்குள்ள மீனவர்கள் சொந்த நாட்டிற்கு வர முடியாமல் சிக்கலில் உள்ளனர். மேலும் அவர்களுக்கு உணவு, மருத்துவ பொருள்கள் எதுவும் இல்லாமல் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்.
இந்நிலையில் அவர்களை மீட்கக் கோரி பெற்றோர்கள், உறவினர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கும், ஈரானில் உள்ள இந்திய தூதரகத்திற்கும் இ-மெயில் மூலம் தகவல் தெரிவித்தனர். எனினும் மீனவர்களை மீட்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.