தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சக மீனவரைக் கொலைசெய்த நபர் சவுதியில் கைது - சவுதி காவல்துறையினர்

கன்னியாகுமரி: சவுதியில் கோவளம் மீனவரைப் படுகொலை செய்த ராஜாக்கமங்கலம் மீனவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

fisherman arrested
fisherman arrested

By

Published : Feb 6, 2020, 10:46 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் கோவளத்தைச் சேர்ந்தவர் மீனவர் சதீஷ் (29). இவர் சவுதி நிசான் பகுதியில் மீன்பிடித் தொழில் செய்துவந்தார். இவரும் ராஜாக்கமங்கலத்தைச் சேர்ந்த ஜோன்ஸ் (27) என்ற மீனவரும் சவுதிக்குக் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சென்று ஒரே இடத்தில் வசித்து மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இரண்டு பேரும் உணவு சாப்பிட கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்றபோது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜோன்ஸ், சதீஷைக் கத்தியால் குத்தியதில், சதீஷ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சவுதி காவல் துறையினர் ராஜாக்கமங்கலம் மீனவர் ஜோன்ஸைக் கைதுசெய்து சிறையிலடைத்து இதுகுறித்து விசாரணை நடத்திவருகின்றனர். இதுகுறித்து கோவளத்தில் உள்ள சதீஷ் உறவினர்களுக்கு இன்று இந்திய வெளியுறவுத் துறை, மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தது. தகவலறிந்த சதீஷ் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

சக மீனவரைக் கொலைசெய்த நபர் சவுதியில் கைது

உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சதீஷ் உடலை சொந்த மாவட்டத்துக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: இளம்பெண்ணைக் கடத்தி காருக்குள்ளேயே கட்டாய தாலி கட்டிய இளைஞர்

ABOUT THE AUTHOR

...view details