கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தைச் சேர்ந்த ரத்னம் என்பவருக்கு சொந்தமான சகாய மாதா என்ற விசைபடகு, திருநெல்வேலி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தைச் சேர்ந்த செரென்ஸ் என்பவருடைய சகாய மாதா விசைப்படகின் மீது இரு தினங்களுக்கு முன்பு நடுக்கடலில் மோதியது. இதில் நாட்டுப்படகில் இருந்த மீனவர் ஒருவர் மாயமான நிலையில், வினோ, சகாயம் ஆகிய இரு மீனவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
படகு விபத்துக்கு காரணமான மீனவர்கள் சரண் - fisher men
கன்னியாகுமரி: நடுக்கடலில் படகு விபத்து ஏற்பட காரணமான மீனவர்கள் ஐந்து பேர், காவல்துறையினரிடம் சரணடைந்தனர்.
இவ்விபத்து கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்ட மீன்வர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், திருநெல்வேலி மாவட்ட மீனவர்கள் நடுக்கடலில் மாயமானவர்களை இரு தினங்களாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில், திருநெல்வேலி மாவட்ட நாட்டு படகின் மீது மோதிய விபத்துக்கு காரணமான கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் மிக்கேல், ராவான்ஸ், வினிஸ்டன், ஸ்டிபன், சகாயம் உள்ளிட்ட ஐந்து பேரும், கன்னியாகுமரி காவல் துறை துணை கண்காணிப்பாளரிடம் நேற்று நள்ளிரவு சரண் அடைந்தனர். இதனையடுத்து, சரணடைந்த ஐந்து பேரையும், கன்னியாகுமரி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) கைது செய்து சிறையி அடைத்தார்.