கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஈரான் நாட்டில் மீன் பிடித்துவருகிறார்கள். தற்போது ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி கொண்டிருப்பதால் ஈரான் நாட்டில் தங்கி மீன் பிடிக்கும் மீனவர்களை பத்திரமாக மீட்கக் கோரி குமரி மாவட்ட மீனவர்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது, குமரி மாவட்டத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்கள் ஈரான் நாட்டில் அந்நாட்டு அரேபிய முதலாளியிடம் ஒப்பந்தப் பணியாளராக மீன்பிடித்து வருகின்றனர்.
தற்போது ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் பரவி கொண்டிருக்கும் நிலையில் மீனவ மக்களுக்கு வைரஸ் தொற்றிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. ஆனால் மீன் பிடிப்பதற்கு அரேபிய முதலாளி தொடர்ந்து வற்புறுத்திவருகிறார். அங்குள்ள மீன்பிடித் துறைமுகங்கள் அடைக்கப்பட்டுள்ளன. மீனவர்கள் உணவு வாங்குவதற்கு கடைகள் திறக்கப்படாத நிலையில் மீனவர்கள் தவித்து வருகின்றனர்.
மீனவர்களை மீட்க ஆட்சியரிடம் மனு மீனவர்கள் அனைவரும் விசைப்படகில் தங்கி, குளிப்பதற்கும், குடிப்பதற்கும் தண்ணீர்கூட இல்லாத சுகாதாரமற்ற நிலையில் தங்கி உள்ளனர். இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு மீனவர்களுக்கு ஏற்படுவதற்கு முன்பு அவர்களை பத்திரமாக மீட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கொண்டு வர வேண்டும் என அவர்கள் கூறினர்.
இதையும் படிங்க:'அமைச்சரின் அன்பும்' 'எம்எல்ஏவின் வீராப்பும்' - அதிமுக விழாவில் ருசிகரம்!