கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் 2 போக நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. முதல் பருவ நெல் சாகுபடி ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாத இறுதியில் அறுவடை பணிகள் நடைபெறும். அந்த வகையில் மாவட்டம் முழுவதும் நெல் அறுவடை பணிகள் நடந்துவருகின்றன. இந்த நிலையில் அரசு தரப்பில் நெல் கொள்முதல் நிலையங்களின் கட்டடங்கள் கூரை இல்லாமல் பழுதடைந்துள்ளன. இதன் காரணமாக மழை பெய்தால் நெல் மூட்டைகள் நனையும் நிலையில் உள்ளது. இந்த நேரத்திலேயே நாகர்கோவில் அருகே பறக்கை என்ற இடத்தில் புதிய நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தர விவசாயிகள் அரசை தொடர்ந்து வலியுறுத்தினர்.
அதன் அடிப்படையில் புதிய நெல் கொள்முதல் நிலையத்தின் கட்டமானப் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் அதன் பணிகள் முடிவடையாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அறுவடை செய்த நெல்களை அரசின் நெல் கொள்முதல் நிலையத்தில் கொடுக்க முடியாமல், தனியார் கட்டடங்களை வாடகைக்கு எடுத்து விவசாயிகள் அங்கு நெல் மூட்டைகளை வைத்து வருகின்றனர்.