தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு மருத்துவமனை கரோனா வார்டு அருகே தீ விபத்து - Corona Ward

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா வார்டு அருகே நேற்று (ஜூலை 7ஆம் தேதி) இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

அரசு மருத்துவமனை கரோனா வார்டு அருகே தீ விபத்து
அரசு மருத்துவமனை கரோனா வார்டு அருகே தீ விபத்து

By

Published : Jul 8, 2021, 2:43 PM IST

கன்னியாகுமரி: ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கரோனா வார்டு அமைக்கப்பட்டு, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கரோனா வார்டின் பின்பகுதியில் பழைய மருத்துவ அட்டைப்பெட்டிகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த அட்டைப் பெட்டியில் நேற்று இரவு திடீரென தீப்பற்றி எரிந்தது.

உடனடியாக கரோனா நோயாளிகள் வெளியேற்றம்

உடனே நோயாளிகள் மருத்துவமனை ஊழியர்களிடம் தகவல் தெரிவித்தனர். அதற்குள் கரோனா வார்டு புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதையடுத்து கரோனா நோயாளிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அரைமணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

தீ விபத்து பற்றி தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் அரவிந்த் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

இதையும் படிங்க: இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா

ABOUT THE AUTHOR

...view details