கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி அமைந்துள்ளது. இங்கு ஏராளமான விலை உயர்ந்த சந்தனம், ஈட்டி, வேங்கை உள்ளிட்ட காட்டு மரங்களும், மிளா, கரடி, குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகளும் வசித்து வருகின்றன.
இந்நிலையில், நேற்று (பிப். 03) ஆரல்வாய்மொழி வனப்பகுதியில் திடீர் என காட்டுத் தீ ஏற்பட்டது. சிறிய அளவில் ஏற்பட்ட இந்த தீயை வனத்துறையினர் உடனடியாக அணைத்தனர். இந்நிலையில், இன்று(பிப்.4) இரவு திடீரென காட்டுத் தீ கொளுந்துவிட்டு எரிய தொடங்கியது. இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு, வனத்துறையினர் தீயை அணைப்பதற்கு மலைப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.