குமரி மாவட்டம் தக்கலை அருகேயுள்ள புலியூர்குறிச்சியில் அமைந்துள்ள உதயகிரி கோட்டை பல்லுயிரின பூங்காவில் மான், மயில், முயல் உள்ளிட்ட பல்வகை உயிரினங்கள் உள்ளன. இந்நிலையில், அங்குள்ள புதர்களில் தீப்பிடித்துள்ளது. அதனைக்கண்ட பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
உதயகிரி கோட்டை பல்லுயிரின பூங்காவில் தீ விபத்து - உதயகிரி கோட்டை பல்லுயிரின பூங்கா
குமரி: உதயகிரி கோட்டை பல்லுயிரின பூங்காவில் ஏற்பட்ட தீயானது தீயணைப்பு வீரர்கள், வனத் துறையினர்களின் தீவிர முயற்சியால் அணைக்கப்பட்டதால், பல்வகை உயிரினங்கள் பாதுகாக்கப்பட்டன.

-biodiversity-park
உடனே அங்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், பொதுமக்கள் உதவியுடன் தீயைப் போராடி அணைத்தனர். தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு அணைக்கப்பட்டதால் அங்குள்ள பல்வகை உயிரினங்கள் பாதுகாக்கப்பட்டன.
பல்லுயிரின பூங்காவில் தீ விபத்து
இதையும் படிங்க:மரக்கடையில் தீ விபத்து: 30 லட்சம் மதிப்பிலான மரச்சாமான்கள் எரிந்து நாசம்!