கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவருக்குச் சொந்தமான பர்னிச்சர் கடை உள்ளது. நேற்று இரவு இவரது கடையில் மின் கசிவு காரணமாக திடீரென கடைக்குள் தீப்பிடித்துள்ளது.
இந்த நிலையில் பர்னிச்சர் கடையில் இருந்து புகை வந்ததுள்ளது. இதைப் பார்த்ததும் அந்த வழியாகச் சென்றவர்கள் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். பர்னிச்சர் கடை உரிமையாளருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஷட்டரைத் திறந்த போது, புகை அதிகமாக வந்ததுடன், கடை முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.