கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு தினம்தோறும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், மருத்துவமனை வளாகத்தில் உள்ள பழைய கட்டடத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.
மருத்துவமனையின் பழைய கட்டடத்தில் நோயாளிகள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. எனினும் அங்கிருந்த மருத்துவ உபகரணகள் எரிந்து நாசமாயின. மேலும், தீ விபத்தினால் ஏற்பட்ட புகை மூட்டத்தால் சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் குறித்து ஆசாரிப்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பாலியல் தொழிலாளியை நம்பிச் சென்றவரிடம் பணம் பறித்த கும்பல்!