குமரி மாவட்டம் நாகர்கோவிலில் தளவாய் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (70). இவரது கணவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காலமான நிலையில், இவரது மகள்கள், மகன் திருமணமாகி இரு வேறு இடங்களில் குடியிருந்து வருகின்றனர்.
இதனால், ஆறுமுகம் தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று(பிப்.19) இரவு வழக்கம்போல் அவர் தூங்கிக் கொண்டிருந்த போது, வீட்டிற்குள் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக திடீரென தீப்பற்றி எரிந்தது.
மின்கசிவால் சிலிண்டர் வெடித்து மூதாட்டி உயிரிழப்பு! - மின்கசிவு காரணமாக கேஸ் சிலிண்டர் வெடிப்பு
கன்னியாகுமரி: குமரி மாவட்டம் நாகர்கோவிலில் நள்ளிரவில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக வீட்டில் தீப்பிடித்து கேஸ் சிலிண்டர் வெடித்தது. இந்த விபத்தில் மூதாட்டி ஒருவர் தீயில் கருகி உயிரிழந்தார்.
இதனால் வீட்டுக்குள் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்ததில், மின்னல் வேகத்தில் வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதில் ஆறுமுகம் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து,தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தும், அப்பகுதி தெருக்கள் குறுகலாக இருப்பதால், அவர்களால் உரிய நேரத்தில் வர இயலவில்லை. இதனால் மூதாட்டியின் உயிரை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மூதாட்டியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து கோட்டார் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வுக்குத் தடை