தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்ஜெட் 2020: கல்வித் துறைக்கு ஏமாற்றமே - கல்வியாளர் கருத்து

கன்னியாகுமரி: மத்திய அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை கல்வித் துறையை பொருத்தவரைக்கும் ஒரு மிகப்பெரிய ஏமாற்றத்தைத் தரக்கூடியதாகத்தான் இருக்கிறது என கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் 2020: கல்வித் துறைக்கு ஏமாற்றமே -கல்வியாளர் கருத்து!
பட்ஜெட் 2020: கல்வித் துறைக்கு ஏமாற்றமே -கல்வியாளர் கருத்து!

By

Published : Feb 1, 2020, 7:04 PM IST

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை குறித்து பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு ஈடிவி பாரத்திற்கு பிரத்யேக பேட்டியளித்தார். அதில், “இந்திய அரசு 2020-2021 நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிதிநிலை அறிக்கை பொருளாதார வளர்ச்சியைப் பற்றி அதிகம் பேசினால் கூட, இந்திய அரசியலமைப்பு சட்டம், பொருளாதாரம் மேம்பட கல்வியை அடிப்படை உரிமையாக வழங்க வேண்டும் எனச் சொல்கிறது.

இந்திய சட்ட பிரிவு 41 அதை உறுதிப்படுத்துகிறது. ஆனால் தொடக்கக் கல்வியைக் கூட ஒரு தரமான கற்றல் வாய்ப்போடு கூடிய கல்வியாகக் கொடுக்காமல் தொடக்கக் கல்வியில் கூட பல அடுக்கு கல்வி முறையை அனுமதிப்பது ஏற்புடையதல்ல.

பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு பேட்டி

உயர்கல்வியில் ஏற்கனவே வலுவாக இருக்கக்கூடிய அரசு உயர்கல்வி நிறுவனங்களை சுயநிதிப் பிரிவுகளில் தொடங்குவதற்கு அனுமதிப்பதன் மூலமும், எல்லா மட்டத்திலும் எல்லா துறையிலும் தனியார் மற்றும் அரசு கூட்டு என்பது மூலமாகவும் ஒட்டுமொத்தமாக பள்ளிக்கல்வித் துறையிலிருந்து உயர்கல்வி வரைக்கும் சந்தையிடம் கொடுக்கக் கூடிய ஒரு நிதி நிலை அறிக்கையாக இந்த நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது.

இது நிச்சயமாக கல்வி மேம்பாட்டிற்கும் அனைத்து மக்களுக்கும் சமமான ஒரு வாய்ப்பை தரக்கூடிய கல்வி அமைப்பை உருவாக்குவதற்கு நிச்சயமாக இது பயன்படாது. அந்த வகையில் இந்த நிதிநிலை அறிக்கை கல்வித் துறையை பொருத்தவரைக்கும் ஒரு மிகப்பெரிய ஏமாற்றத்தை தரக்கூடியதாகதான் இருக்கிறது” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க... பட்ஜெட் குறித்து தலைவர்கள் கருத்து

ABOUT THE AUTHOR

...view details