கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் எச். வசந்தகுமார் தேர்தலில் வெற்றிப் பெற்றதற்காக பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழச்சி நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில் அவர் பேசுகையில்,"மத்திய அரசின் பட்ஜெட் மூடிமறைக்கப்பட்ட பட்ஜெட். மக்களுக்கு நலன்தராத பட்ஜெட் ஆகும். இதில் தமிழ்நாட்டிற்கு பெரிய அளவில் எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை.
மத்திய பட்ஜெட் மூடி மறைக்கப்பட்டது - வசந்தகுமார் எம்.பி., - நாகர்கோவில்
கன்னியாகுமரி: சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் மூடிமறைக்கப்பட்டது எனவும், மக்களுக்கு பயன்இல்லாத பட்ஜெட் எனவும், அதில் தமிழ்நாட்டிற்கு பெரிய அளவில் எந்த திட்டம் ஏதும் இல்லை என்று எம்.பி.வசந்தகுமார் விமர்சித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்திக்கும் எம்.பி வசந்தகுமார்
மேலும் மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் தான் அடிக்கல் நாட்டியுள்ளார். எனவே செயல்படுத்த வேண்டியது அவரது கடமையாகும். பட்ஜெட் தாக்கல் செய்த அன்றைய தினமே பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது மக்களை பாதிக்கும் செயலாகும் என்றார்.