கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அடுத்த சரல்விளை பகுதியை சேர்ந்தவர் சௌந்தர பண்டியன்(80). இவர் திருமணமாகாத தனது மகன் நாகராஜன்(40) உடன் வசித்து வந்தார். நாகராஜனுக்கு மதுப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் அடிக்கடி மது அருந்திவிட்டு சௌந்தரபாண்டியனிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
மதுபோதையில் தகராறு செய்த மகனை கொலை செய்த தந்தை - கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே மது போதையில் தகராறில் ஈடுபட்ட மகனை தந்தையே கொலை செய்துள்ளார்.
குடிபோதையில் தகராறு செய்த மகனை வெட்டி கொன்ற தந்தை
இதேபோல நேற்றிரவு குடிபோதையில் வந்த நாகராஜன், சௌந்தர பாண்டியனிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சௌந்தரபண்டியன் வீட்டில் இருந்த கோடாரியால் நாகராஜனை தாக்கியுள்ளார். இதில் நாகராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து உடலை மீட்டனர். சௌந்தர பண்டியனை கைது செய்தனர்.
இதையும் படிங்க: தேங்காய்பட்டினத்தில் படகிலிருந்து கடலில் தவறி விழுந்த மீனவர் மாயம்