தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடும்பத் தகராறில் மகன் தற்கொலை: இறப்பில் சந்தேகம் இருப்பதாக தந்தை புகார்

கன்னியாகுமரி: தனது மகன் தற்கொலை செய்து இறந்ததில் சந்தேகம் இருப்பதால் நடவடிக்கை எடுக்கக் கோரி அவரின் தந்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார்.

father complains of suspicion of son's death

By

Published : Nov 14, 2019, 6:07 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் அருவிக்கரை பொன்னப்பன் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜூவின் மகன் சுனில் ராஜ் (30). கடந்த ஒன்றாம் தேதி சுனில் ராஜ் குடும்பப் பிரச்னை காரணமாக தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில், அவரது தந்தை ராஜு, தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அந்த மனுவில், “எனது மகன் சுனில் ராஜுக்கும் மணக்குடியைச் சேர்ந்த சகாய சுபா என்பவருக்கும் கடந்த 2005ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தனிக்குடித்தனம் நடத்திய இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். தம்பதியினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2011ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். சகாய சுபா தனியாக சென்றுவிட்ட நிலையில், சுனில் ராஜ் தனது இரண்டு மகன்களையும் அழைத்துக்கொண்டு எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டார்.

பின்னர் சகாய சுபாவின் வீட்டார் சுனில் ராஜ் உடன் சமரசம் பேசி இருவரையும் சமீபத்தில் சேர்த்து வைத்தனர். இதன் பின்னர் இருவரும் சகாய சுபாவின் ஊரான மணக்குடியில் தங்கியிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதம் 31ஆம் தேதியன்று எனது மகனுக்கும் மருமகளுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதால், சகாய சுபாவின் பெற்றோர் இருவரையும் சமாதானம் செய்து வைத்து அன்றிரவு அவர்களது வீட்டிலேயே தங்க வைத்துள்ளனர்.

புகாரளித்த சுனில் ராஜூவின் தந்தை

பின்னர் காலையில் எழுந்து பார்த்தபோது, எனது மகன் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரது உடலை மீட்டு உடற்கூறாய்வுக்குப் பிறகு அடக்கம் செய்த பின், எனது மூத்த பேரன் சம்பவம் நடந்த தினத்தன்று இரவில் யாரோ பேசுவதுபோல் இருந்ததால் விழிப்பு ஏற்பட்டதாகவும், அப்போது தனது தந்தை தரையில் படுத்திருக்க அவரைச் சுற்றி தனது தாத்தா பாட்டி அமர்ந்திருந்து ஏதோ பேசிக் கொண்டிருந்ததாகவும் கூறினான்.

மேலும் இதனைக் கண்டு பயந்த அவன் மீண்டும் தூங்கி விட்டதாகவும், காலையில் எழுந்து பார்த்தபோது, தனது தந்தை தூக்கில் தொங்கி இறந்து விட்டதாகவும் என்னிடம் தெரிவித்தான். எனவே எனது மகனின் சாவில் சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஐஐடி மாணவி தற்கொலை - 3 பேராசிரியர்களை சுற்றி வளைக்கும் காவல் துறை!

ABOUT THE AUTHOR

...view details