தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அதே பகுதியைச் சேர்ந்த வணிகர்களான ஜெயராஜ், அவரின் மகன் பென்னிக்ஸ் ஆகியோரை காவல்துறையினர் தாக்கியுள்ளனர். இதனை அடுத்து தந்தையும் மகனும் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர்.
சாத்தான்குளம் லாக்கப் மரணம் - கன்னியாகுமரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் - Marxist Communist demonstration in Kanyakumari
கன்னியாகுமரி: சாத்தான்குளத்தில் தந்தை, மகனை படுகொலை செய்த காவல்துறையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 27க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
![சாத்தான்குளம் லாக்கப் மரணம் - கன்னியாகுமரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் Marxist Communist demonstration in Kanyakumari](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-04:28:55:1593255535-tn-knk-01-maxsist-protest-visual-7203868-27062020143008-2706f-1593248408-127.jpg)
ஜெயராஜ், ஃபெனிக்ஸ் உயிரிழப்புக்கு காவல்துறையினரே காரணம் என பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் இச்சம்பவத்திற்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் தங்களது கருத்துகளை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்தும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் நாகர்கோவில், தக்கலை, திங்கள் நகர், மார்த்தாண்டம் உட்பட 27 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஊரடங்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு மாவட்டத்தின் முக்கிய சந்திப்புகளில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் முன்னாள் எம்பி, எம்எல்ஏ உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.