கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயத்திற்கு பேச்சிப்பாறை பெருஞ்சாணி அணை தண்ணீரையும், குளத்து தண்ணீரையும் வைத்து விவசாயிகள் பயன்படுத்திவருகின்றனர். தற்போது பேச்சிப்பாறை அணை பராமரிப்புப் பணிகள் நடந்துவருவதால் அணையில் தண்ணீர் தேக்க முடியாத நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் சாகுபடி செய்வது எப்படி என தவித்துவருகின்றனர்.
பொய்த்துப்போன மழை - சாகுபடி செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள்! - r kanni flower irrigation
நாகர்கோவில்: தென்மேற்கு பருவமழை பெய்யாததால் குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடி செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து கன்னிப்பூ சாகுபடிக்கு தயாராகும் விதத்தில் விவசாயிகள் நிலங்களை பண்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் அணைகளில் போதிய தண்ணீர் இல்லாததால் கன்னிப்பூ சாகுபடியை உடனடியாக தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது விவசாயிகளை கவலையடையச் செய்துள்ளது. இப்படி கோடை மழை ஏமாற்றிவிட்ட நிலையில் தென்மேற்கு பருவமழையாவது கைகொடுக்கும் என்று பருவமழையை நம்பி விவசாயிகள் காத்திருக்கின்றனர்.