கன்னியாகுமரி: தேசிய நெடுஞ்சாலை எண் 47 மற்றும் 47பி என்ற வகையில் நான்கு வழி சாலை திட்டப் பணிகள் தொடங்கப்பட்டு 12 ஆண்டுகள் ஆகின்றன. ஆனாலும், இப்பணிகள் முடிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த திட்டப்பணிகளுக்காக பொதுமக்கள் தங்களின் பட்டா நிலங்கள், வீடுகள், விவசாய நிலங்கள் உள்ளிட்டவற்றைக் கொடுத்தனர்.
ஒரு சென்ட் முதல் பல ஏக்கர் வரை கொடுத்த பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு அரசின் கணக்குப்படி ரூ.380 கோடி வழங்க வேண்டும். இதற்கான அறிக்கையும் தயாரானது.
ஆனால், பல வருடங்கள் ஆகியும் இந்த இழப்பீட்டுத்தொகை நிலம் கொடுத்த மக்களுக்கு இதுவரை வழங்க மத்திய அரசு முன்வரவில்லை; எனவே இந்த இழப்பீட்டுத்தொகையை அரசு வழங்க வேண்டும் எனக்கூறி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் நிலம் கொடுத்த பொதுமக்கள் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நான்கு வழி சாலை இழப்பீட்டுத்தொகையை அரசு வழங்க வேண்டும் - போராடிய விவசாயிகள் கேரள அரசு நிலம் கொடுத்தவர்களுக்கு மத்திய அரசிடம் போராடி இழப்பீட்டுத்தொகையை வாங்கி கொடுத்தது போல, தமிழ்நாட்டில் ஆளும் அரசு நடந்துகொள்ளவில்லை என்று வேதனையும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:மோர்பி பால விபத்தில் பாஜக எம்.பி.யின் உறவினர்கள் 12 பேர் பலி!