கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்தாண்டு இறுதி மாதங்களில் பருவமழை போதிய அளவு பெய்ததால், நீர்நிலைகள் நிரம்பின. இதனால் தண்ணீர் இல்லாமல் இருந்த விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
குளத்துப் பாசனம் மட்டுமின்றி ஆற்று பாசனம் மூலமும் மாவட்டத்தில் உள்ள ஆறாயிரத்து 500 ஹெக்டேர் வயல் வரப்புகளிலும் நெல் சாகுபடி செய்யப்பட்டது.
ஏற்கனவே, தரிசாகக் கிடந்த இரண்டாயிரம் ஹெக்டேருக்கு மேற்பட்ட வயல் வரப்புகளில் நான்கு மாதங்களுக்கு முன்னரே நெல் நடவு பணிகள் முடிந்தன. தற்போது அவை அறுவடை பருவத்தை எட்டியுள்ளன.