தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை!

கன்னியாகுமரி: தென்தாமரைக்குளம் அருகே விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால், விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By

Published : Jun 30, 2020, 1:59 AM IST

Farmer suicides due to debt
Farmer suicides due to debt

கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைக்குளம் அருகிலுள்ள தெற்கு கரும்பாட்டூரைச் சார்ந்தவர் டேனியல் (63). இவருக்கு சாந்தகுமாரி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். மகன்கள் மற்றும் மகளுக்குத் திருமணமாகிவிட்டது. டேனியலுக்கும் அவரது மனைவிக்கும் குடும்பப் பிரச்னை இருந்து வந்ததால், சாந்தகுமாரி தன்னுடைய இளைய மகன் வீட்டில் வசித்து வருகிறார். டேனியல் தனியாக தனக்குச் சொந்தமான ஒரு வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் டேனியல் தனக்குச் சொந்தமான நிலத்தில் தக்காளி, வெண்டை போன்ற காய்கறிகளைப் பயிரிட்டு விவசாயம் செய்து வந்துள்ளார். சமீபகாலமாக விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் விவசாயம், செய்ய பெற்ற கடனை அடைக்கமுடியாமல் கடன் தொல்லையும் அதிகரித்து வந்துள்ளது.

விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அவர், கடந்த சில தினங்களாக மனக்குழப்பத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் டேனியல், வீட்டில் வைத்திருந்த பயிர்களுக்குப் பயன்படுத்தும் விஷத்தை, குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இது சம்பந்தமாக தென்தாமரைக்குளம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விவசாயி கடன் தொல்லையால், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details