தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவல் துறை அலுவலர்கள் மீது விவசாயி புகார்

கன்னியாகுமரி: சொத்து பிரச்னை தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கண்டுகொள்ளாமல் செயல்பட்ட காவல் துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விவசாயி ஒருவர் புகார் அளித்துள்ளார்.

farmer petition against police in kanyakumari in land issue
farmer petition against police in kanyakumari in land issue

By

Published : Apr 20, 2020, 1:22 PM IST

இது தொடர்பாக சுகுமாரன் என்ற விவசாயி அளித்துள்ள புகார் மனுவில், 'கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி அருகே உள்ள மார்த்தாண்டபுரத்தைச் சேர்ந்த நான் (சுகுமாரன்) காசி திருமடம் திருப்பனந்தாள் மடத்திற்கு சொந்தமான சுமார் 18 ஏக்கர் நிலத்தை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறேன். இந்த நிலத்தை சிலர் அபகரிக்க முயன்றனர்.

இதுதொடர்பாக வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவை மீறி அலுவலர்களோ மற்றவர்களோ செயல்படக்கூடாது என ஆணை உள்ளது. எனினும் கன்னியாகுமரி காவல் துறை அலுவலர், காவல் துறையினர் எதிரிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதோடு என்னையும் எனது மகனையும் தாக்கினர்.

இதனால் எனது மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், நீதிமன்ற ஆணையை மீறி காவல் துறையினர் தனிநபர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். எனவே, என்னையும் எனது மகனையும் தாக்கிய காவல் துறை அலுவலர், அதற்கு உடந்தையாக இருந்த காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறை அலுவலர்கள் மீது விவசாயி புகார்

இதையும் படிங்க... பறிக்கப்படாமல் செடியிலேயே பழுத்து வீணாகும் பச்சை மிளகாய்.!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details