திமுக-காங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்த உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து, குமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு வந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது, 'மோடி கடந்தத் தேர்தலில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு விவசாயியைக் கூட சாக விடமாட்டேன் எனக் கூறி ஆட்சிக்கு வந்தார். அவர் ஆட்சி செய்த ஐந்து ஆண்டுகளில் கார்ப்பரேட் கம்பெனியின் தொழிலதிபர்களுக்கு மட்டுமே உதவினார். விவசாயிகளுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மாற்றம் செய்து பாஜகவினர் ஜெயித்து விடுவார்கள் என்று கிராமத்தில் இருப்பவர்கள் கூட கூறுகின்றனர். அதற்கு சான்றுதான் ஆந்திராவில் நடந்த சம்பவம்.
'தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் நேர்மையாக இல்லை...!' - DMK-CONGRESS COALITION
கன்னியாகுமரி: நாகர்கோவிலில் உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து, தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் நேர்மையாக இல்லையெனவும், வாக்குக்கு 500 ரூபாய் என அதிமுகவினர் வீடுவீடாக கொடுக்கின்றனர் எனவும் அவர் புகார் தெரிவித்தார்.
Uzhavar uzhaipalar katchi leader chellamuthu
தேர்தல் ஆணையம், பாஜகவுடன் பேசி தொகுதி வாங்கி வேட்பாளர் மட்டும்தான் நிறுத்தவில்லை. மற்றபடி கூட்டணியாக சேர்ந்துதான் இருவரும் செயல்பட்டுவருகின்றனர். தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்படவில்லை. அதிமுகவினர் வீடுவீடாக 500 ரூபாய் பணம் கொடுத்து வருகின்றனர்' என அவர் புகார் கூறினார்.