கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகரன் பிரசாத் ரவுடிகளை பிடிக்க தனிப்படைகளை அமைத்து மாவட்டம் முழுவதும் உள்ள ரவுடிகளின் விபரங்களை சேகரித்து, அவர்களை பிடிக்க தீவிர தேடுதல்
வேட்டை நடத்தினார்.
இதன் பலனாக கொலை, கொள்ளை, கடத்தல் போன்ற கொடூர செயல்களில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகள் நீதிமன்ற பிணை பெற்று பின்னர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடி வெள்ளை செந்தில், செம்பொண்கரை காலனியைச் சேர்ந்த நாகராஜன், வனத்துறை அலுவலர் ஆறுமுகம் மற்றும் அவர் மனைவி யோகேஸ்வரி ஆகியோரை சுட்டுக் கொலை செய்த தாத்தா செந்தில் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதன் தொடர்ச்சியாக கன்னியாகுமரி அருகே உள்ள நாச்சியார் குடியிருப்பைச் சேர்ந்தவர் லிங்கம். பிரபல ரவுடியான இவர், கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு, நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வாறு ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த லிங்கத்தை, 1996ஆம் ஆண்டு ஒரு கும்பல் அத்துமீறி சிறைக்குள் புகுந்து வெட்டி கொலை செய்தது.
அவரது தலையைத் துண்டித்து எடுத்துச் சென்று மீனாட்சிபுரம் பேருந்து நிலையம் பகுதியில் வைத்து விட்டு அந்த கும்பல் தப்பிச் சென்று விட்டது. இது மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் 36 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.