தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குமரியில் குண்டர் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது - kanyakumari district news

கன்னியாகுமரி: பிரபல கஞ்சா வியாபாரியை காவல் துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பிரபல கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
பிரபல கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

By

Published : Nov 24, 2020, 6:42 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களை குறைக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி, தொடர் குற்றங்களில் ஈடுபடுவோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

அந்த வகையில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய பாலப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த மார்ட்டின் என்ற செல்வின் கிளமெண்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரைத்தார்.

அதன்படி மார்ட்டினை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்தார். இதைத் தொடர்ந்து கருங்கல் காவல் துறையினர் மார்ட்டினை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: கொலை வழக்கில் தொடர்புடைய மூவர் குண்டர் சட்டத்தில் கைது...!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details