கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அடுத்த பால் குளத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உறுப்பு கல்லூரி செயல்படுகிறது. இக்கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
கல்லூரி மாணவிகளுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்! - tamilnews
கன்னியாகுமரி: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அரசு உறுப்பு கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
முகாம்
இந்நிலையில், பெண்கள் அமைப்பு சார்பில் பெஜான் சிங் கண் மருத்துவமனையுடன் இணைந்து இக்கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில், மாணவிகளுக்கு ரெட்டினா, கேட்ராக்ட், கிட்டப்பார்வை, தூரப்பார்வை உள்ளிட்ட பல்வேறு வகையான கண் நோய்களுக்கான பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டன. இதில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
இதையும் படிங்க:பட்ஜெட் 2020-21: சென்னை மெட்ரோவுக்கு ரூ.3,100 கோடி ஒதுக்கீடு