தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 17, 2019, 7:58 PM IST

ETV Bharat / state

எப்போது வரும் ’நாஞ்சில் நாடு எக்ஸ்பிரஸ்’? எதிர்பார்ப்பில் குமரி மக்கள்

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் இருந்து சென்னை தாம்பரம் வரை வாரத்திற்கு மூன்று நாள் மட்டுமே இயக்கப்படும் ரயிலை, ”நாஞ்சில் நாடு எக்ஸ்பிரஸ்” என்ற பெயரில் தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

எப்போ வரும் நாஞ்சில் நாடு எக்ஸ்பிரஸ் ரயில்?

சுமார் 20 லட்சம் மக்கள் தொகையை கொண்டுள்ள கன்னியாகுமரி மாவட்டம், தமிழகத்தின் முக்கியமான மாவட்டங்களில் ஒன்றாகும். மாநிலத்தின் தலைநகரான சென்னைக்கு குமரி மாவட்ட மக்கள் செல்ல வேண்டும் என்றால் அதிக தூரம், அதிக பயண நேரம் செலவு செய்ய வேண்டியுள்ள காரணத்தினால் விரைந்து செல்வதற்காக ரயில் பயணத்தையே விரும்புகிறார்கள்.

கன்னியாகுமரி ரயில் நிலையம்

நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் செல்லும் ரயில் வாரத்திற்கு மூன்று முறை மட்டுமே இயக்கப்பட்டு வருவதாலும், பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு பெருகியுள்ளதாலும் பயணிகள் அதிக சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

எனவே நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு வாரத்திற்கு மூன்று முறை இயக்கப்படும் ரயிலை ”நாஞ்சில் நாடு எக்ஸ்பிரஸ்” என்ற பெயரில் தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என்று குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details