கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அதில், "கரோனா காலகட்டத்தில் தமிழ்நாடு அரசு மதுக்கடைகளைத் திறந்திருக்கக் கூடாது. கரோனாவை பயன்படுத்தி பூரண மதுவிலக்கை அமல்படுத்தியிருக்க வேண்டும். தமிழ்நாடு அரசு செய்தது மிகப்பெரிய தவறு.
'ஆட்சியைப் பிடிக்க திமுக ஒரு நல்ல எம்எல்ஏ-வை கொன்றுவிட்டது' - பொன். ராதாகிருஷ்ணன் - kanniyakumari district news
குமரி: திமுக ஆட்சிக்கு வருவதற்காக ஒரு நல்ல சட்டப்பேரவை உறுப்பினரைக் கொன்றுவிட்டார்கள் என முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
poriyurundai
அணை கட்டும்போது நரபலி கொடுப்பது போன்று, திமுக ஆட்சிக்கு வருவதற்காக ஒரு நல்ல சட்டப்பேரவை உறுப்பினரைக் கொன்றுவிட்டார்கள். கரோனா பரவல் காரணமாக வெளியே செல்லாதீர்கள் என்று கூறி, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திய அன்பழகனை களத்தில் இறக்கிவிட்டது யார்? என்பதை விளக்க வேண்டும்" என கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க:ஊரடங்கு உத்தரவை ரத்து செய்ய மனு - மனுதாரருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம்!