கன்னியாகுமரி: சுசீந்திரம் தேரூரை சேர்ந்தவர் ஜெயபிரசாத். இவர் இந்திய ராணுவத்தில் நீண்ட காலமாக பணியாற்றி வந்தார். 2014ஆம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றார். பின்னர் சொந்த ஊர் திரும்பி அவர் ஏடிஎம்மில் பணம் கொண்டு செல்லும் செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இவரின் மனைவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். திருமணமான இவரது மகள் வெளியூரில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை வேலைக்காக புறப்பட்டவர், திடீரென தனது படுக்கை அறைக்கு சென்று கதவை மூடியுள்ளார்.
பின்னர், உள்ளே இருந்து துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்டுள்ளது. இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் உடனடியாக கதவை தட்டியுள்ளனர். உள்ளே இருந்து எந்த சத்தமும் கேட்காததால் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
ஜெயபிரசாத் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இது குறித்து தகவலறிந்து அங்கு சென்ற சுசீந்திரம் காவல் துறையினர், அவரது உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க:தாய், மகளைக் கொன்று நகைகள் கொள்ளை..!