கன்னியாகுமரியில் தென்னிந்திய திருச்சபை போதகர்கள் மூன்று நாள் மாநாடு நடைபெற்றுவருகிறது. இதில் தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் மற்றும் தெலங்கானா ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய தென்னிந்திய திருச்சபை போதகர்கள் 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். மாநாட்டின் 2ஆவது நாளான நேற்று கன்னியாகுமரி தூய பேதுரு ஆலயத்தில் இருந்து கன்னியாகுமரி காந்திமண்டபம் வரை சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தென்னிந்திய திருச்சபை போதகர்கள் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி - South Indian pastors march in Kanyakumari
கன்னியாகுமரி: தென்னிந்திய திருச்சபை போதகர்கள் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
Environmental awareness rally for pastors, தென்னிந்திய திருச்சபை போதகர்கள் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி
பேரணியில் போதகர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு, நிலத்தடி நீரை சேமித்தல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திய படி நடந்துசென்றனர்.