மாணவர்களுக்கு தொழிற் கல்வியை ஊக்குவித்து தொழில் முனைவோராக மாற்றும் வகையில் முன்னாள் இந்தியப் பிரதமர் வாஜ்பாய் பெயரில் பிரதமர் மோடி அறிவித்த அடல்டிங்கரிங் திட்டத்தின் கீழ் கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தொழில் முனைவோர் ஆய்வரங்கம் நேற்று தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.