கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், வெளியூரிலிருந்து குறிப்பாக கேரளாவிலிருந்து வருபவர்களை எல்லைப் பகுதியான களியக்காவிளையில் சுகாதாரத்துறை அலுவலர்கள் சோதனை செய்து வருகின்றனர். சோதனையில், தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்களைத் தனிமைப்படுத்தி, சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நாகர்கோவில் வடசேரி பகுதியைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர், வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவர், தனது உறவினரின் திருமணம் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சொந்த ஊர் வந்தார்.