கன்னியாகுமரி ஸ்டெல்லா மேரிஸ் வளாகத்திலுள்ள அரங்கத்தில் சர்வதேச மின்னியல் அமைப்பின் சார்பில் பொருளாதாரத்தின பின்தங்கிய குடும்பங்களில் வசிக்கும் மாணவ-மாணவிகளுக்கு திறன் கண்டறியும் முகாம் மூலம் தேர்வு செய்யப்பட்டு 90 நாள் பயிற்சி அளிக்கும் விழா நடைபெற்றது. இதற்கு முன்னாள் ஐக்கிய நாட்டு தொழில் வளர்ச்சி கழக மூத்த ஆலோசகர் டாக்டர் ஜெபமாலை தலைமைதாங்கினார். மேலும் இந்த பயிற்சி வகுப்பில் தேர்வாகும் மாணவர்கள் பல்வேறு மாநிலங்களில் உள்ள உயர்ரக மருத்துவமனையில் உள்ள அறுவை சிகிச்சை அரங்குகளிலும், நட்சத்திர ஓட்டல்களிலும் பயிற்சி அளிக்கப்பட்டு அங்கேயே வேலை வாய்ப்பும் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி - பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள்
கன்னியாகுமரி: பொருளாதரத்தில் பின்தங்கிய குடும்பங்களில் இருக்கும் பத்தாம் வகுப்பு படித்த மாணவ மாணவிகளுக்கு உயர்தர மருத்துவமனை மற்றும் நட்சத்திர ஒட்டல்களில் பணிபுரிவதற்கான பயிற்சி வகுப்பு முகாம் தொடங்கப்பட்டது.
job training
இந்த விழாவில் ஏராளமான மாணவ மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இங்கு பயிற்சி அளிக்க மாணவர் ஒருவருக்கு 36 ஆயிரம் ரூபாயை வங்கி மூலம் பெற வட்ட மேஜை அமைப்பு ஏற்பாடு செய்கிறது. பணியில் சேர்ந்த பின் மாணவர்கள் பணத்தை தவணை முறையில் திருப்பி செலுத்த வாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது.