தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தோட்டத்துக்குள் புகுந்து யானை அட்டகாசம் - Elephants roar News

பூதப்பாண்டி அருகே உள்ள தோட்டத்தில் யானை ஒன்று புகுந்து அங்குள்ள தென்னை, வாழை மரங்களைப் பிடுங்கி நாசம் செய்ததை கன்னியாகுமரி சட்டப்பேரவை உறுப்பினர் தளவாய் சுந்தரம் நேரில் சென்று பார்வையிட்டார்.

தோட்டத்துக்குள் புகுந்து யானை அட்டகாசம்
தோட்டத்துக்குள் புகுந்து யானை அட்டகாசம்

By

Published : Jun 2, 2021, 7:32 AM IST

கன்னியாகுமரி: பூதப்பாண்டி அருகே உள்ள தெள்ளாந்தி உடையார் கோணம் பகுதியில் 45 ஏக்கரில் தென்னை, கொக்கோ, மா, வாழை போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் அந்தப் பகுதியில் வந்த யானை ஒன்று தோட்டத்துக்குள் புகுந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களையும், நூற்றுக்கும் மேற்பட்ட வாழை, மா, பலா கொண்ட மரங்களையும் பிடுங்கி சேதப்படுத்தியது.

இது குறித்து தகவலறிந்த கன்னியாகுமரி சட்டப்பேரவை உறுப்பினர் தளவாய் சுந்தரம், சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டார். பின் பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார். அதனைத் தொடர்ந்து வனத் துறை அலுவலர் ரமேஷ் என்பவரைத் தொடர்புகொண்டு, யானைகள் வராமல் இருக்க அகழி அமைக்க வலியுறுத்தினார்.

அவரது கோரிக்கையை ஏற்ற வனத் துறையினர் இரண்டு நாள்களுக்குள் அகழி அமைக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

இதையும் படிங்க:வாலிபர் இடுப்பில் 28 லட்சம் ரூபாய் பணம்: ரயில்வே போலீசார் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details