தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டு யானைகள்: பொதுமக்கள் அச்சம்

கன்னியாகுமரி: கோதையாறு ஆதிவாசி குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டு யானை கூட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டுயானைகள்

By

Published : Jul 3, 2019, 1:51 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை, கோதையாறு, மயிலேறு போன்ற பகுதிகளில் அரசு ரப்பர் தோட்டம் மற்றும் ஆதிவாசிகள் குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வாழை, அன்னாசி போன்றவற்றை பயிரிட்டு பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து ஒரு குட்டி யானை உட்பட ஐந்து யானைகள் கூட்டம் திடீரென குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தன. அங்கு ஆதிவாசி மக்கள் பயிரிட்டிருந்த வாழைகள், அன்னாசி பயிர்களை பிடுங்கி வீசி சேதப்படுத்தின.

மேலும் ரப்பர் தோட்டத்திற்குள் புகுந்து அங்கு பால் வெட்டும் தொழிலாளர்கள் அமைத்திருந்த கொட்டாய்களையும் சேதப்படுத்தின. இதையடுத்து அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் திரண்டு பட்டாசு வெடித்தும், ஒலி எழுப்பியும் யானைக் கூட்டத்தை வனப்பகுதிக்குள் துரத்த போராடினர். வெகு நேரத்திற்கு பிறகு ஒரு வழியாக யானைகள் திரும்பி காட்டுக்குள் சென்றன.

அதன்பின் அங்கு வந்த வனத்துறையினர், வனப்பகுதியில் தண்ணீர் இல்லாததால் யானை கூட்டம் தண்ணீரை தேடி குடியிருப்புப் பகுதியில் புகுந்து உள்ளதாக தெரிவித்தனர். குடியிருப்புக்குள் யானைக் கூட்டம் புகுந்ததால் பொதுமக்கள் அச்சத்துடனே காணப்படுகின்றனர்.

குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டுயானைகள்

ABOUT THE AUTHOR

...view details